பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் 'தர்ணா' போராட்டம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
தர்மபுரி: அரூர், கோட்டப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் 29; இவர், நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். திடீரென கலெக்டர் கார் அருகே, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் விசாரித்ததில், கடந்த நவ.,ல் அரூர், கொளகம்பட்டியை சேர்ந்த, தன் உறவினர் ராதாகிருஷ்ணனின் மகன் தங்கம், 19, கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்தார். காதல் விவகாரம் தொடர்பாக, அவர் கொலை செய்யப்பட்டு,

தர்மபுரி: அரூர், கோட்டப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் 29; இவர், நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். திடீரென கலெக்டர் கார் அருகே, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் விசாரித்ததில், கடந்த நவ.,ல் அரூர், கொளகம்பட்டியை சேர்ந்த, தன் உறவினர் ராதாகிருஷ்ணனின் மகன் தங்கம், 19, கிணற்றில் மர்மமாக இறந்து கிடந்தார். காதல் விவகாரம் தொடர்பாக, அவர் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டுள்ளார். ஆனால் அவர், நீரில் மூழ்கி இறந்ததாக, அரூர் போலீசார் கூறுகின்றனர். இச்சம்பவம் குறித்து, முறையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்க வந்தேன், என கூறியுள்ளார். இதையடுத்து அவரை, போலீசார் விசாரணைக்காக, டவுன் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X