சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதிரியார் கடத்தி சென்ற மகளை மீட்டு தரக்கேட்டு தந்தை மனு

Added : டிச 08, 2020
Share
Advertisement
ஜமுனாமரத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்தவர் ஜெயராஜ், 49, பாதிரியார்; இவர், ஜவ்வாதுமலை பெருங்காட்டூரில் தங்கி, மதபோதனையும், மாலையில் மாணவியருக்கு டியூஷனும் நடத்தி வந்தார். கடந்த அக், 24ல், 13, வயதுடைய, 9ம் வகுப்பு மாணவியை, பாதிரியார் ஜெயராஜ் கடத்திச்சென்றார். இது குறித்து, மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்படி, ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து

ஜமுனாமரத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்தவர் ஜெயராஜ், 49, பாதிரியார்; இவர், ஜவ்வாதுமலை பெருங்காட்டூரில் தங்கி, மதபோதனையும், மாலையில் மாணவியருக்கு டியூஷனும் நடத்தி வந்தார். கடந்த அக், 24ல், 13, வயதுடைய, 9ம் வகுப்பு மாணவியை, பாதிரியார் ஜெயராஜ் கடத்திச்சென்றார். இது குறித்து, மாணவியின் தந்தை கொடுத்த புகாரின்படி, ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிரியார் மொபைல்போன் பயன்படுத்தாமல் உள்ளதால், அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கடத்தி செல்லப்பட்ட, தன் மகளை கண்டுபிடித்து தர, நடவடிக்கை எடுக்க வேண்டி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, அச்சிறுமியின் தந்தை மனு அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X