பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல்போன் கொள்ளையர்களுக்கு ரூ.6.50 கோடி ஹவாலா பணம் கைமாற்றம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ''மொபைல் போன் கொள்ளையர்களுக்கு, 6.50 கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி உள்ளது,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., பண்டி கங்காதர் கூறினார். இது குறித்து அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 13 ஆயிரத்து, 920 மொபைல் போன்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி கடந்த அக்., 21ல், மும்பை நோக்கி சென்றது. சூளகிரி, மேலுமலை வழியாக

கிருஷ்ணகிரி: ''மொபைல் போன் கொள்ளையர்களுக்கு, 6.50 கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி உள்ளது,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., பண்டி கங்காதர் கூறினார். இது குறித்து அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 13 ஆயிரத்து, 920 மொபைல் போன்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி கடந்த அக்., 21ல், மும்பை நோக்கி சென்றது. சூளகிரி, மேலுமலை வழியாக சென்ற அந்த லாரியை, 8 பேர் கொண்ட கும்பல் கடத்தியது. அவர்களை பிடிக்க, ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி.,கள் சங்கர், முரளி மற்றும் ஏழு இன்ஸ்பெக்டர்கள், 6 எஸ்.ஐ.,க்கள் உள்பட, 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. விசாரணையில், மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரா என்பவர் தலைமையில், 18 பேர் கொண்ட கும்பல், இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள், மொபைல் போன்களை, மத்திய பிரதேசம் கொண்டு சென்று, அங்கிருந்து, துபாயை சேர்ந்த அப்பாஸ் என்பவருக்கு கொடுத்துள்ளனர். இதற்காக, இக்கும்பலுக்கு, 6.50 கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி உள்ளது. இந்த மொபைல் போன்களை, திரிபுரா அனுப்பி, அங்கிருந்து வங்கதேசம் டாக்கா கொண்டு சென்றுள்ளனர். இந்த வழக்கில், மத்திய பிரதேச மாநிலம் இன்டூர் பரத்தேஜ்வானி, 37, தேவாஸ் மாவட்டம் ராஜேந்திர சவுகான், 45, பவானி சிங் ஹடா, 35, கமல்சிங் ஹடா, 60, ஹேம்ராஜ் ஜாலா, 24, இன்டூர் அமீர்கான், 29. பரத் அஸ்வானி, 36, திரிபுரா அமித்தா டாடா, 39, ஷாஜகான் மியா, 31, முகமது ஜாகித், 26, ஆகிய, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய, வெளிநாட்டில் உள்ள சிலரையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். கொள்ளையர்களை பிடித்த தனிப்படையை எஸ்.பி., பாராட்டி, வெகுமதி வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X