பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் - பெங்களூரு மின்சார ரயில் சேவை துவக்கம்: அறிவிப்பு இல்லாததால் 10 பேர் மட்டுமே பயணம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் - பெங்களூரு இடையே நேற்று முதல், மின்சார ரயில் சேவை துவங்கியது. முறையான அறிவிப்பு இல்லாதால், 10 பேர் மட்டுமே ரயிலில் பயணித்தனர்.ஓசூர் - பெங்களூரு மற்றும் தர்மபுரி இடையே, மின்சார ரயில் இயக்க, ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள், 2017 - 18ல் துவங்கின. ஓசூர் - பெங்களூரு இடையே மின்மயமாக்கும் பணிகள் சமீபத்தில் முடிந்தன. ஆனால், ஓசூரிலிருந்து தர்மபுரி வரை மின்மயமாக்கும்

ஓசூர்: ஓசூர் - பெங்களூரு இடையே நேற்று முதல், மின்சார ரயில் சேவை துவங்கியது. முறையான அறிவிப்பு இல்லாதால், 10 பேர் மட்டுமே ரயிலில் பயணித்தனர்.


ஓசூர் - பெங்களூரு மற்றும் தர்மபுரி இடையே, மின்சார ரயில் இயக்க, ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள், 2017 - 18ல் துவங்கின. ஓசூர் - பெங்களூரு இடையே மின்மயமாக்கும் பணிகள் சமீபத்தில் முடிந்தன. ஆனால், ஓசூரிலிருந்து தர்மபுரி வரை மின்மயமாக்கும் பணிகள், கொரோனா காரணமாக, ராயக்கோட்டை அருகே பெரிய நாகதுணை வரை, 24 கி.மீ., தூரத்துக்கு மட்டுமே முடிக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு முடிவு செய்து, நேற்று காலை முதல், பயணிகள் மின்சார ரயில் சேவையை, தென்மேற்கு ரயில்வே நிர்வாகம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து துவங்கியது. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், நேற்று காலை, 8:45 மணிக்கு, ஓசூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, பெங்களூருவில் இருந்து வந்த மின்சார ரயில், காலை, 9:15 மணிக்கு, பெங்களூரு புறப்பட்டு சென்றது. முறையான அறிவிப்பு இல்லாமல், மின்சார ரயில் சேவை துவங்கப்பட்டதால், ஒன்பது ரயில் பெட்டிகளில், மொத்தம், 10 மட்டுமே பயணம் செய்தனர். வரும், 17 வரை, வாரத்தில் ஆறு நாட்களுக்கு, தினமும் ஒருமுறை மட்டும் மின்சார ரயில் இயக்கப்படும் என, தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் பின், இந்த ரயில் சேவை நிரந்தரம் செய்யப்படுமா என அறிவிக்கப்படும். இதன் மூலம், 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 15 முதல், 20 ரூபாய் கட்டணத்தில், பெங்களூரு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X