சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கட்டட தொழிலாளிக்கு சிறை

Added : டிச 08, 2020
Share
Advertisement
நாமக்கல்: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த காளிப்பட்டியை சேர்ந்த வரதராஜ் மகன் பிரபு, 23. கட்டட மேஸ்திரியான அவர், 2018, மே, 21ல் ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு படித்த, 14 வயது சிறுமியை, கடத்திச் சென்று, திருமணம் செய்து, பாலியல்

நாமக்கல்: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த காளிப்பட்டியை சேர்ந்த வரதராஜ் மகன் பிரபு, 23. கட்டட மேஸ்திரியான அவர், 2018, மே, 21ல் ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டியை சேர்ந்த, எட்டாம் வகுப்பு படித்த, 14 வயது சிறுமியை, கடத்திச் சென்று, திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர், ராசிபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில், போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, பிரபுவை கைது செய்தனர். இவ்வழக்கு, நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், பிரபுவுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X