பொது செய்தி

தமிழ்நாடு

ஜவ்வரிசி, ஸ்டார்ச் விலை சரிவால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி

Added : டிச 08, 2020
Share
Advertisement
சேலம்: ஜவ்வரிசி, ஸ்டார்ச் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவால், மரவள்ளி கிழங்கு விலையில், வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பது, 17 மாவட்ட விவசாயிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.சேலம் சேகோ சர்வில், நவ.,1ல் ஜவ்வரிசி மூட்டை (90 கிலோ) 4,010 ரூபாய், ஸ்டார்ச், 3,050 ரூபாய்க்கு விற்றது. சேகோ சர்வில், ஜவ்வரிசியை கொள்முதல் செய்து வந்த, வடமாநில வியாபாரிகள், ஆந்திராவில் கொள்முதல் செய்து வருகின்றனர். அதே

சேலம்: ஜவ்வரிசி, ஸ்டார்ச் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவால், மரவள்ளி கிழங்கு விலையில், வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பது, 17 மாவட்ட விவசாயிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.


சேலம் சேகோ சர்வில், நவ.,1ல் ஜவ்வரிசி மூட்டை (90 கிலோ) 4,010 ரூபாய், ஸ்டார்ச், 3,050 ரூபாய்க்கு விற்றது. சேகோ சர்வில், ஜவ்வரிசியை கொள்முதல் செய்து வந்த, வடமாநில வியாபாரிகள், ஆந்திராவில் கொள்முதல் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், கிழங்கு மாவு மில்களில் இருந்து, மக்காச்சோளம் கலப்படம் செய்யப்பட்ட ஜவ்வரிசி, ஸ்டார்ச்சை உரிமையாளர்கள் வடமாநிலங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் சேலம் சேகோ சர்வில், விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் தினமும், 5,000 முதல், 6,000 மூட்டைகள் விற்பனையான நிலையில், தற்போது, 2,000 முதல், 2,500 மூட்டைகளே விற்பனையாவதால், மூன்று லட்சம் மூட்டைகள் விற்பனையாகாமல் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன. கடந்த, 37 நாட்களில் ஜவ்வரிசி விலையில் மூட்டைக்கு, 645 ரூபாய், ஸ்டார்ச் விலையில், 545 ரூபாய் சரிந்து, நேற்று ஜவ்வரிசி, 3,365 ரூபாய், ஸ்டார்ச், 2,505 ரூபாய்க்கு விற்பனையானது. ஜவ்வரிசி, ஸ்டார்ச் விலையில் ஏற்பட்ட தொடர் சரிவால், மரவள்ளி கிழங்கு விலையில் டன்னுக்கு, 5,000 ரூபாய் சரிந்தது. நவ.,1ல் தரத்தின் அடிப்படையில் டன், 9,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை விற்றது, நேற்று, 4,000 ரூபாய் முதல், 5,000 ரூபாயாக சரிந்தது. மரவள்ளி கிழங்கு அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால், கிழங்கு மாவு மில் உரிமையாளர்கள் கொள்முதலை நிறுத்தி விட்டனர். இதனால், உற்பத்தியான மரவள்ளி கிழங்கை, விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருப்பது, சேலம், விழுப்புரம் உட்பட, 17 மாவட்ட விவசாயிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X