திருவண்ணாமலை: ''தடையை மீறி, அண்ணாமலையார் மலை மீது சென்று, மகா தீப தரிசனம் செய்த சினிமா நடிகை மீது, உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கர் கூறினார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 29ல், 2,668 அடி உயர அண்ணாமலையால் மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. இந்த தீபம் நாளை (9) வரை, எரியும். மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை, பக்தர்கள் மலையேறி சென்று பார்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை தடை விதித்துள்ளது. மலை வழிதடங்களில் வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், மலை உச்சிக்கு சென்று, மகா தீப தரிசனம் செய்த நடிகை சஞ்சிதா ஷெட்டி, தான் தரிசனம் செய்த படத்தை, அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். தடையை மீறி, அவர் மலை மீது சென்றது குறித்து, மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் கேட்டபோது, ''நடிகை சஞ்சிதா ஷெட்டியை யார் மலைக்கு அழைத்து சென்றது என தெரியவில்லை. உள்ளூர் நபர்களின் உதவியோடுதான் அவர் சென்றிருப்பார். இது குறித்து, விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE