பொது செய்தி

தமிழ்நாடு

கொடி நாள் வசூல்: ரூ.1.69 கோடி இலக்கு

Added : டிச 08, 2020
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், கொடி நாள் வசூல் துவக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மெகராஜ், கொடி நாள் நிதி உண்டியலில், நிதி வழங்கி வசூலை துவக்கி வைத்து பேசியதாவது: ஆண்டு தோறும், டிச., 7ம் நாள், முப்படைவீரர் கொடிநாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடு காத்த படைவீரர்களை நினைவு கூறும் வகையில், இத்தினத்தில், முப்படைகளின்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், கொடி நாள் வசூல் துவக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மெகராஜ், கொடி நாள் நிதி உண்டியலில், நிதி வழங்கி வசூலை துவக்கி வைத்து பேசியதாவது: ஆண்டு தோறும், டிச., 7ம் நாள், முப்படைவீரர் கொடிநாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடு காத்த படைவீரர்களை நினைவு கூறும் வகையில், இத்தினத்தில், முப்படைகளின் நிறம் பதித்த கொடிகள், பொதுமக்கள் அணியும் வண்ணம் வழங்கப்படுகிறது. கொடிநாள் வசூல் தொகையானது, படைப்பணியின் போது உயிர் நீத்த, ஊனமுற்ற படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்காக, ஆண்டு பராமரிப்பு மானியம், வங்கிகடன் வட்டி மானியம், கல்வி உதவித்தொகை உள்பட நிதி உதவிகளாக வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்துக்கு, கொடிநாள் 2019ம் ஆண்டுக்கு, ஒரு கோடியே, 69 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதில், 93 லட்சத்து, 19 ஆயிரம் ரூபாய் வசூல் எட்டியுள்ளது. நடப்பு ஆண்டு, ஒரு கோடியே, 69 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை, அனைத்து துறை அலுவலர்களும் விரைந்து எட்ட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X