நாமக்கல்: ''புதிய வேளாண் சட்டங்களை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்,'' என, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி கூறினார்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் வேலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யக்கூடாது. கிராமப்புற விவசாயிகள், ஏழை, எளிய மக்கள், கூட்டுறவு கடன் சங்கங்களை நம்பியே உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தையும், வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொண்டு, கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு சேர்க்கக் கூடாது. விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆதரவு அளிக்கிறோம். புதிய வேளாண் சட்டங்களை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE