நாமக்கல்: நாமக்கல்லில் சாலையோரம் இருந்த அரச மரம், நெடுஞ்சாலைத்துறையால், மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது. நாமக்கல் - சேலம் சாலையில் சாக்கடை வடிகால் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சாலையோரம் உள்ள மரங்களை அகற்றும் பணி நடக்கிறது. அதில், புளிய மரங்களுடன், கருப்பக்கவுண்டர் வளைவு அருகே இருந்த பழமையான அரசமரம் ஒன்றும் அகற்றும் பணி நடந்தது. பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட அந்த மரத்தை, மாற்று இடத்தில் நடவு செய்வதற்கு, நெடுஞ்சாலை பணிகள் மற்றும் பராமரிப்பு துறையினர் முடிவு செய்தனர். இந்நிலையில், ஏற்கனவே மரங்களை இடமாற்றம் செய்து நடவு செய்து வரும் பணியில் ஈடுபடும், துளிகள் அறக்கட்டளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுடன் இணைந்து, அம்மரத்தை, ரெக்கவரி வாகன உதவியுடன் வேரோடு எடுத்து, முதலைப்பட்டி புறவழிச்சாலை அருகே, மீண்டும் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE