பொது செய்தி

தமிழ்நாடு

பண்ணைகளில் 8 கோடி முட்டைகள் தேக்கம்: கொள்முதல் விலை 2 நாளில் 40 காசு சரிவு

Added : டிச 08, 2020
Share
Advertisement
நாமக்கல்: பண்ணைகளில், எட்டு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாலும், வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளதாலும், கொள்முதல் விலை, இரண்டு நாட்களில், 40 காசு சரிந்துள்ளது.நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,000 பண்ணைகளில், ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே,

நாமக்கல்: பண்ணைகளில், எட்டு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாலும், வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளதாலும், கொள்முதல் விலை, இரண்டு நாட்களில், 40 காசு சரிந்துள்ளது.
நாமக்கல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,000 பண்ணைகளில், ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். நவ., 21ல், 475 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலை, 23ல், 25; 26ல், 25 என, மூன்று நாட்களில், 50 காசு குறைக்கப்பட்டது. அதையடுத்து, 26ல், 15 காசு உயர்த்தப்பட்டு, 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 5ல், 20; நேற்று, 20 என, இரண்டு நாட்களில், 40 காசு சரிந்து, 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: வடமாநிலங்களுக்கு, வழக்கமாக, தினமும், 50 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகின்றன. தற்போது, தொடர் மழை காரணமாக, 20 லட்சமாக குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில், புயல் காரணமாக வாகனங்கள் இயக்குவது தடைபட்டுள்ளது. அதனால், முட்டைகளை சரியானபடி விற்பனை செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பண்ணைகளில், இரண்டு நாட்களாக, எட்டு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அவற்றை கருத்தில் கொண்டு, முட்டை கொள்முதல் விலையை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வர உள்ளதால், கேக் தயாரிப்பதற்கு, முட்டை அதிகளவில் தேவைப்படும். அதேபோல், வடமாநிலங்களுக்கு, முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளதால், கூடுதலாக முட்டையை அனுப்ப கேட்டுள்ளனர். அதன் காரணமாக, இன்னும் ஒரு வாரத்தில், முட்டை கொள்முதல் விலை உயரும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X