பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்

Added : டிச 08, 2020
Share
Advertisement
நாமக்கல்: ''கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துபோன வியாபாரிகளின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும்,'' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயத்தில், அத்தியாவசிய பொருட்களில் இருந்து வெங்காயம், உருளை கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய்

நாமக்கல்: ''கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துபோன வியாபாரிகளின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும்,'' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயத்தில், அத்தியாவசிய பொருட்களில் இருந்து வெங்காயம், உருளை கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களை, மத்திய அரசு அகற்றியதற்கு, பேரமைப்பு சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மீண்டும் அத்தியாவசிய பொருட்களை சேர்க்க வேண்டும். டில்லியில், விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடி, நேரடியாக தலையிட்டு, விவசாயிகளை அழைத்து பேசி, அவர்களுடைய கோரிக்கையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். நாளை (இன்று) நடக்கும் அனைத்து வகை போராட்டத்திலும், தமிழக வணிகர் சங்க பேரமைப்பு, விவசாயிகள் போராட்டத்துக்கு, எங்களுடைய தார்மீக ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா தொற்று பேரிடர் காலத்தில், பாதிக்கப்பட்டு, இறந்துபோன வியாபாரிகளுக்கு, தமிழக அரசு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடுத்தொகை வழங்க வேண்டும். வெள்ளத்தால், கடலூர், கன்னியாகுமாரி மாவட்டத்தில், பல கடைகள் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளன. கொரோனா காலத்தில், விவசாயிகள், மீனவருக்கு இழப்பீடுத்தொகை வழங்குவது போல், பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆய்வு செய்து, முறையாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X