கரூர்: இலவச பட்டா இடத்தை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கையகப்படுத்தும் முயற்சிக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கரூர், மேலப்பாளையத்தில், இலவச வீட்டு மனைக்கான பட்டா இடத்தை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கையகப்படுத்த முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்., அலுவலகத்தை, நேற்று அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். கரூர் வருவாய் துறை அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: அமராவதி ஆற்றில், 1977 ல் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மேலப்பாளையத்தில் வசித்து வந்த, 87 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வீடுகள் இழந்துள்ளனர். இவர்களுக்கு, 1980ல் மூன்று சென்ட் இடம் ஒதுக்கிய அரசு, அதற்கான பட்டாவும் வழங்கியுள்ளது. ஆனால், 87 நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாப்படி, நான்கு எல்லைகள் பிரித்து கொடுக்கப்படாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். எனவே, 43 ஆண்டு கள் கடந்தும் காகிதத்தில் பட்டா இருந்தது. முறைப்படி, இடத்தை பிரித்து கொடுக்காததால், வீடுகள் கட்ட முடியவில்லை. பல முறை போராடியும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அந்த இடத்தில், அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்காக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம் என கூறி, மேலப்பாளையம் பஞ்., கூட்டத்தில், கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த தீர்மானத்தை ரத்து செய்து, அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கும் வகையில், புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, அதிகாரிகள் மிரட்டுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE