கரூர்: ''மாட்டு வண்டியில் மணல் அள்ள விரைவில் அனுமதிக்கப்படும்,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் உள்ள புகளூர் வாய்க்கலை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அப்போது, அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மழை காலத்தில் போது டி.என்.பி.எல்., ஆலையில் வெளியேறும் கழிவுநீர், புகளூர் வாய்க்காலில் கலக்கிறது என, விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆலை நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. இனிமேல் கழிவுநீர் கலக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று, அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில், மாட்டு வண்டி தொழிலாளர்கள், உள்ளூர் தேவைக்கு மணல் அள்ள அனுமதி வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர். இந்த கோரிக்கை முதல்வர் பழனிசாமிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு, விரைவில் அனுமதி வழங்கப்படவுள்ளது. இதனை தெரிந்து, சின்ன ஆண்டாங்கோவிலை சேர்ந்த தினேஷ் என்பவர், மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, இன்று (நேற்று) விசாரணைக்கு வந்த போது, அரசு வக்கீல், 'விரைவில் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும்' என்று தெரிவித்தார். 'இந்த தகவலை தெரிந்தே வழக்கு தொடர்ந்துள்ளீர்கள்' என்று கண்டனம் தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். மேலும், கொரோனா தொற்று காலம் என்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க முடியவில்லை. இதனால், பழைய பஸ் பா ?ஸ காண்பித்து பயணம் செய்யலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE