பொது செய்தி

தமிழ்நாடு

17,500 கன அடி தண்ணீர் வரத்து: கலெக்டர் எச்சரிக்கை

Added : டிச 08, 2020
Share
Advertisement
கரூர்: 'அமராவதி உள்ளிட்ட நான்கு அணைகளில் இருந்து, 17 ஆயிரத்து, 500 கன அடி நீர் ஆற்றில் வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்' என, கரூர் கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, 7,450 கன அடி, திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையில் இருந்து, 400 கனஅடி, பாலாறு

கரூர்: 'அமராவதி உள்ளிட்ட நான்கு அணைகளில் இருந்து, 17 ஆயிரத்து, 500 கன அடி நீர் ஆற்றில் வருவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்' என, கரூர் கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, 7,450 கன அடி, திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையில் இருந்து, 400 கனஅடி, பாலாறு பெருந்தலாறு அணையில் இருந்து, 4,995 கன அடி, வரதமாநதியில் இருந்து, 3,995 கன அடி என, 16 ஆயிரத்து, 840 கன அடிநீர் வெளிற்றப்படுகிறது. இந்த நீருடன் மழைநீரும் சேர்ந்து, 17 ஆயிரத்து, 500 கன அடி நீர் அமராவதி ஆற்றில் வருகிறது. தாழ்வான பகுதிகளில் யாரும் இருக்க வேண்டாம். ஆற்றில் குளிப்பதையோ, துணி துவைப்பதையோ, செல்பி எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதிகளில், அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X