மனைவி மாயம்: போலீசில் கணவர் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி மாயம்: போலீசில் கணவர் புகார்

Added : டிச 08, 2020
Share
குளித்தலை: குளித்தலை அடுத்த, மணப்பாறை தாலுகா அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராசு, 27; கட்டட தொழிலாளி. இவரது மனைவி ரெனில்டா. 21; நர்சிங் கல்லூரி மாணவி. கடந்த, 2 மாலை, 5:00 மணியளவில் தரகம்பட்டி தனியார் மருத்துவமனைக்கு, ரெனில்டாவும், அவரது தம்பியும் சென்றனர். பின்பு, பாத்ரூம் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்ற ரெனில்டா, திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் தகவல்

குளித்தலை: குளித்தலை அடுத்த, மணப்பாறை தாலுகா அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராசு, 27; கட்டட தொழிலாளி. இவரது மனைவி ரெனில்டா. 21; நர்சிங் கல்லூரி மாணவி. கடந்த, 2 மாலை, 5:00 மணியளவில் தரகம்பட்டி தனியார் மருத்துவமனைக்கு, ரெனில்டாவும், அவரது தம்பியும் சென்றனர். பின்பு, பாத்ரூம் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்ற ரெனில்டா, திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. தங்கராசு கொடுத்த புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X