பொது செய்தி

இந்தியா

எத்தனை வேடம் போட்டாலும் கம்யூனிஸ்டுகளின் திட்டம் மட்டும் நிறைவேறாது...

Updated : டிச 08, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
விவசாயிகளுக்கு விரோதமாக, மூன்று சட்டங்களை, மோடி அரசு அமல்படுத்தி உள்ளது. ஒருபக்கம், மத்திய அமைச்சர்கள், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். மற்றொரு பக்கம், பிரதமர் மோடி, பிரமாதமான சட்டம் என பாராட்டி பேசி வருகிறார். இவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர்.- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்'எத்தனை வேடம் போட்டாலும், கம்யூ.,க்களின் சகுனித்திட்டம் மட்டும்
எத்தனை வேடம் போட்டாலும் கம்யூனிஸ்டுகளின் திட்டம் மட்டும் நிறைவேறாது...

விவசாயிகளுக்கு விரோதமாக, மூன்று சட்டங்களை, மோடி அரசு அமல்படுத்தி உள்ளது. ஒருபக்கம், மத்திய அமைச்சர்கள், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். மற்றொரு பக்கம், பிரதமர் மோடி, பிரமாதமான சட்டம் என பாராட்டி பேசி வருகிறார். இவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


'எத்தனை வேடம் போட்டாலும், கம்யூ.,க்களின் சகுனித்திட்டம் மட்டும் நிறைவேறாது...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி.



மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை, முதல்வர் இ.பி.எஸ்., சிறப்பாக நடத்தி, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார். எனவே, வரும், 2021ல், அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்.
- தமிழக கைத்தறி துறை அமைச்சர் மணியன்


'ஜெ., ஆட்சி என சொல்லாதீர்கள்... ஏராளமான ஊழல், முறைகேடுகள் நடந்த ஆட்சி என, மக்கள் துாற்றுகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் மணியன் பேட்டி.



வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஜி.பி.ஆர்.எஸ்., கருவியை பொருத்த, தமிழக அரசு கட்டாயப்படுத்துகிறது. இதை கண்டித்து, வரும், 27 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட உள்ளனர்.
- தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி


latest tamil news




'கொரோனா காலத்துல வாழ்வாதாரம் போச்சு... சாப்பாட்டுக்கே வழியில்லைன்னு புலம்பினதெல்லாம் பம்மாத்து வேலை தானா... இப்ப, கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்யிறதைப் பார்த்தா, வாழ்வாதாரம்லாம் ஜகஜ்ஜோதியா இருக்கிற மாதிரியில்லே இருக்கு...' என, மடக்கத் தோன்றும் வகையில், தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி பேட்டி.



மக்கள் ஓட்டு போட்டு, முதல்வராக பழனிசாமி வரவில்லை. இதனால், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் கஷ்டம், முதல்வருக்கு தெரியவில்லை; அவர் ஒரு போலி விவசாயி. வரும் சட்டசபை தேர்தலில், முதல்வர் பழனிசாமி, இடைப்பாடி தொகுதியில், வெற்றி பெற முடியாது.
- எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி


'ஓட்டு போட்டு, தமிழகத்தில் எந்த முதல்வர், எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; தகவல் சொன்னால் நல்லதுஜி...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பேச்சு.



கடந்த ஆண்டுகளில், 4.80 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதியதில், வெறும் ஆறு பேர் மட்டுமே டாக்டருக்கு படிக்க முடிந்தது. தமிழக முதல்வரின் உள் ஒதுக்கீடு, 7.5 சதவீதத்தில், 413 பேர் மருத்துவப் படிப்புக்கு வழி பிறந்தது.
- அமைச்சர் அன்பழகன்


'எத்தனை நாளைக்கு தான் இந்த பெருமையை பேசுவீர்கள்; போய் பிள்ளைகளை, டாக்டர்களுக்கு படிக்க வையுங்கள்...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் அன்பழகன் பேச்சு.


Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
09-டிச-202003:38:16 IST Report Abuse
Baskar கட்சி மாறி மாறி வந்து காசுக்கும் பதவிக்கும் அலைகிறாயே அது உனக்கு வெட்கமே இல்லையா.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
08-டிச-202021:27:51 IST Report Abuse
Rajagopal கம்யூனிசம் என்பது இயற்கைக்கு எதிராக மனிதர்களின் மீது நடத்தப்பட்டு, தோல்வியடைந்த ஒரு சித்தாந்தம். இது உலகத்திற்கு உகந்தந்தல்ல என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்தியா இந்த சித்தாந்தத்தை தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-202020:08:11 IST Report Abuse
Bhaskaran பிரபல கம்ம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரய்யா சென்னைக்கு காட்சிப்பணிகளுக்காக நெல்லூரில் இருந்து மிதிவண்டியில் வந்து பனி செய்வார் .கம்ம்யூனிஸ்ட் கட்சி பொருளாளராகவும் இருந்தார் ஒருமுறை மஹாத்மா .காந்தி சுந்தரய்யாவை பார்க்க வேண்டும் என்ற பொது அவர் மக்களுக்காக ஒரு குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்றதும் .இப்பேற்பட்ட ஒருவர பொருளாளராக இருக்கும் கட்சியில் ஊழல்வரவாய்ப்பில்லை என்று சொன்னார் .அப்படிப்பட்ட களங்கமில்லா தலைவர்கள் இருந்த கட்சி இப்போ அறிவாலயவாசலில் அல்பசீட்டுகளுக்காகவும் பலகோடிகளுக்காகவும் காவடி எடுப்பதை நினைக்க வருத்தமாக உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X