நாடு தழுவிய பந்த்; மே.வங்கம், பீஹாரில் ரயில் மறியல்; டயர்கள் எரிப்பு; தமிழகத்தில் பாதிப்பு இல்லை

Updated : டிச 08, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகள் விடுத்த பாரத்பந்திற்கு ஆதரவு தெரிவித்து, கோல்கட்டாவில் இடதுசாரிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் டயர்களை எரித்தனர்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுதும் விவசாயிகள் இன்று(டிச.,8), போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், காலை, 11:00 - மாலை, 3:00 மணி வரை இந்தப்
FarmersProtest, விவசாயிகள்போராட்டம், கோல்கட்டா,

புதுடில்லி: விவசாயிகள் விடுத்த பாரத்பந்திற்கு ஆதரவு தெரிவித்து, கோல்கட்டாவில் இடதுசாரிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் டயர்களை எரித்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, நாடு முழுதும் விவசாயிகள் இன்று(டிச.,8), போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், காலை, 11:00 - மாலை, 3:00 மணி வரை இந்தப் போராட்டம் நடத்தப்படும்' என, விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து, பல மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது.


latest tamil newsமேற்கு வங்க மாநிலம், அன்சோல் பகுதியில், பந்த்திற்கு ஆதரவாக, சிஐடியு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.


latest tamil news


Advertisement


கோல்கட்டாவில், ஜதாப்பூர் ரயில் நிலையத்தில், தண்டவாளங்களில் அமர்ந்த இடதுசாரிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil newsஜாதவ்பூரியில் இடதுசாரி அமைப்பினர், மத்திய அரசுக்கு எதிராக உருவபொம்மையை எரித்தனர்.


latest tamil newsஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.


latest tamil news


பீஹாரின் தர்பங்கமா மாவட்டத்தில் உள்ள கஞ்ச் சவுக் பகுதியில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தருவதாக கூறி டயர்களை எரித்தனர்.


latest tamil news


மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.


latest tamil newsஆந்திராவின் விசாகப்பட்டனம் மாவட்டத்தில், பார்வதிபுரம் பகுதியில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர்.


latest tamil newsவிசாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில், இடதுசாரிகள் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news

latest tamil newsமஹாராஷ்டிராவின் பல்தானா அருகே ரயிலை மறித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். புனேயில் உள்ள ஏபிஎம்சி மார்க்கெட் திறந்து காணப்பட்டது.


latest tamil newsகர்நாடக தலைநகர் பெங்களூருவில், சட்டசபை முன்பு, முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடத்திய காங்கிரசார், மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுட், கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil newsகுல்புர்கி மாவட்டத்தில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். அங்கு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தெலுங்கானாவில், அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் காரணமாக, டில்லி - ஹரியானா சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தமிழகத்தில்....


திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டையில், பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் - நாகப்பட்டனம்- - புதுக்கோட்டை இடையே சாலை மறியல் போராட்டம் நடந்தது.
புதுச்சேரியில் நடந்த போராட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி, நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் போராட வேண்டும் என கேட்டு கொண்டார். அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஆட்டோக்கள் , பஸ்கள் இயங்கவில்லை. டீக்கடைகள், உணவு விடுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஊட்டியில் 40 சதவீத கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன. மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அருவங்காடு பகுதியிலும் ஏராளமான கடைகள் திறக்கப்பட்டன.


latest tamil newsபந்தலூர் அருகே எருமாடு பகுதியில் மறியல் நடந்தது


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
08-டிச-202022:12:25 IST Report Abuse
sankaranarayanan போராட்டத்திற்கென்றே காத்துக்கிடக்கும் காங்கிராஸ், தானும் உருப்படாது - மற்றவர்களை உருப்பட விடாது. இந்த போராட்டத்தின் அம்சம் யாருக்காவது முழுமையாக தெரியுமா? விவசாயிகள் நடத்தும் போராட்டமே இல்லை. இது அரசியல் ஆதாரம் தேட காங்கிரஸ் செய்யும் சூழ்ட்சிதான் இது. யாருக்காவது இந்த போராட்டத்தரத்தின அம்சம் - அந்த சட்டத்தினால் விவசாயிகளுக்கு எவ்வாறு பாதிப்பு - எதை விலக்க வேண்டும் - விவசாயிகளுக்கு எந்த மாதிரி கஷ்டம் நிலவும் - எப்படி அவர்கள் தாக்காப்படுவார்கள் - இந்த சட்டத்தினால் இன்று வரை ஒரு அரசியல்வாதிகூட இதை விவரமாக விளக்கவே இல்லை. அப்போது என்ன அர்த்தம் இது ஒரு மாயை. மக்களை மடமை யாக்கி அரசியல் ஆதாயம் பெறவே எதிர்கட்சிகள் செய்யும் சூழ்ச்சி இது? விவசாயிகளே நன்றாக முழுமையாக புரிந்துகொண்டு, இந்த சட்டத்தை எந்த உட்பாகம் நீக்க வேண்டுமோ அதை பேச்சு வார்த்தைகளில் நீங்களே அரசுடன் அமர்ந்து சரி செய்யுங்கள். விசாயிகள் அல்லாதாரோடு - அரசியல் வாதிகளோடு சேராதீர்கள். விளைவுகள் உங்களுக்கே
Rate this:
Cancel
Saravanan - Chennai,இந்தியா
08-டிச-202018:22:47 IST Report Abuse
Saravanan பீகாரில் ஏ பீ எம் சி, மண்டி கொள்முதல் பல வருடங்களுக்கு முன்பே போய்விட்டது. போராட்டம் விவசாயிகளுக்காக அல்ல. கொள்முதல் செய்து கொள்ளை லாபம் பார்க்கும் ப்ரோக்கர்களுக்காக...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-டிச-202017:24:13 IST Report Abuse
தமிழவேல் இங்கு அமைதியான வழியில் போராட்டம் என்று பொருள்... (தேர்தல் வருதே)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X