பெங்களூரு : ''ரஜினிகாந்த் சொன்னதை செய்வார்''என அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் பெங்களூரில் நேற்று கூறினார்.
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் 77 வசித்து வருகிறார்.தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள ரஜினி நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்தார்.அவருடன் இரவு முழுதும் தங்கிய ரஜினி நேற்று காலை மீண்டும் சென்னை புறப்பட்டார்.அதற்கு முன் 'நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன் வாழ வேண்டும்' என ரஜினியை அவரது அண்ணன் ஆசிர்வதித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தசெய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சத்யநாராயண ராவ் ''அதுபற்றி ரஜினியே டிச. 31ல் தெரிவிப்பார்'' என்றார்.பெங்களூரில் பிறந்து 22 வயது வரையிலான ரஜினியின் வாழ்க்கையை நினைவுகூர்ந்த அவர் ''ரஜினி சொன்ன வார்த்தையை காப்பாற்றும் மனிதர். அவர் கூறியதை நிச்சயம் செய்து முடிப்பார். குருவின் அருள் அவருக்கு எப்போதும் உள்ளது'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE