நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 2021, ஜன., 1ல், 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில், இதுவரை பெயர் பதிவு செய்து கொள்ளாதவர்கள், தங்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளும் வகையில், சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதையடுத்து, நகராட்சி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. கமிஷனர் பொன்னம்பலம், தாசில்தார் கதிர்வேல் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்.டி.ஓ., கோட்டைக்குமார் தலைமை வகித்து பேசியதாவது: வாக்காளர் பட்டியலில், இறந்தவர்களின் பெயர் நீக்கம் செய்ய வேண்டும். அதற்காக, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து மனு பெறவேண்டும். மாற்றுத்திறனாளிகளை பதிவு செய்யும் வகையில், அவர்கள் குறித்தும் கணக்கு எடுக்க வேண்டும். வரும், 12, 13ல், நடக்கும் சிறப்பு முகாம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், இம்முகாமில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் வகையில், உரிய விண்ணப்பங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE