நாமக்கல்: போலீசார் பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறி, மனைவியுடன், விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 40. அவர், வக்கீல் ஒருவரிடம், குமாஸ்தாவாக பணியாற்றி வந்தார். தற்போது, விவசாயம் மேற்கொண்டுள்ளார். அவரது கிராமத்தில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், ஒரு தரப்பினருக்கு ஆதரவாக, வக்கீல் ஒருவரை, முருகன் சிபாரிசு செய்துள்ளார். அதனால், எதிர் தரப்பினர் ஆத்திரமடைந்து, மிரட்டல் விடுத்ததுடன், அவரது மகனை தாக்க முயன்றனர். இது குறித்து, சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், எதிர்தரப்புக்கு ஆதரவாக போலீசார் செயல்படு வதாகவும், தங்கள் குடும்பத்தினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டதாகவும் புகார் தெரிவித்து, முருகனும், அவர் மனைவி பிரேமாவும், 30, நேற்று, கலெக்டர் அலுவலகம் முன், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து, நல்லிபாளையம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE