சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து: காயத்துடன் உயிர் தப்பிய நண்பர்கள்

Added : டிச 08, 2020
Share
Advertisement
மோகனூர்: கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அடுத்த ஏமூர் பகவதி அம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் பொன்னுசாமி மகன் மோகன், 27. அவர், நண்பர்கள் சரவணன் மற்றும் மற்றொருவருடன், தன், 'சான்ட்ரோ' காரில், நேற்று மாலை, 3:00 மணிக்கு, கரூரில் இருந்து மோகனூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவிரி ஆற்றின் மேம்பாலத்தின், நான்காவது கட்டை அருகே,

மோகனூர்: கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அடுத்த ஏமூர் பகவதி அம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் பொன்னுசாமி மகன் மோகன், 27. அவர், நண்பர்கள் சரவணன் மற்றும் மற்றொருவருடன், தன், 'சான்ட்ரோ' காரில், நேற்று மாலை, 3:00 மணிக்கு, கரூரில் இருந்து மோகனூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவிரி ஆற்றின் மேம்பாலத்தின், நான்காவது கட்டை அருகே, மோட்டார் பைக்கில் வந்தவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியவர், காரை நிறுத்தாமல் விரைந்துள்ளார். இந்நிலையில், காவிரி ஆற்றின் அருகில் உள்ள மோகனூர் வாய்க்காலில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மோகனுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் குறைவாக இருந்ததால், லேசான காயத்துடன், மூவரும் உயிர் தப்பினர். அவர்களை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக, மோகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X