சென்னை : சுரப்பா விவகாரத்தில் கருத்து கூறிய கமலுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. 'நான் பி டீம் அல்ல; ஏ டீம் தான்' என கமல் பதில் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மக்கள் நீதி மையம் தலைவர் கமலிடம் சமூகவலைதளம் வாயிலாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.நீவிர் அறத்தின் பக்கம் இல்லை; அயோக்கியர்கள் பக்கம் நிற்கிறீர். ஊழலை ஒரு நாள் ஒழித்து விடலாம். ஆனால் மதவாதத்திற்கு கொம்புசீவி அவர்கள் பக்கம் சாய்வது பேராபத்தை தரும்.தி.மு.க.வை நீங்கள் ஊழல் கட்சி என்றால் சர்க்காரியா கமிஷன் முதல் '2 ஜி' வரை நீதிமன்ற தீர்ப்புகளை தெளிவாக படியுங்கள்.அ.தி.மு.க. ஊழல் கட்சி என்பதற்கு டான்சி முதல் சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வரை படியுங்கள். நீங்கள் சுரப்பாவுக்கு தெரிவித்த ஆதரவை அருந்ததிராயின் கட்டுரை நீக்கத்திற்கும் தெரிவித்திருந்தால் உங்களை மையம் என நம்பலாம்.இவ்வாறு சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
'டுவிட்டரையே' அரசியல் களமாக எண்ணி செயல்பட்டு வரும் கமலுக்கு சமூகவலைதளத்தில் எழுந்த எதிர்ப்பு தேர்தல் நேரத்தில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்நிலையில் டுவிட்டர் பதிவில் கமல் கூறியுள்ளதாவது:
அறத்தின் பக்கம் நிற்பவனை பார்த்து சங்கி மற்றும் 'பி டீம்' என்பவர்களின் நோக்கம் ஊழலை போற்றுவது தான்.வாழ்நாள் முழுக்க தமிழகத்தை சுரண்டி திண்பவர்கள் ஊழலுக்கு ஆபத்து வரும் போது ஒன்றிணைவதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும், பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா...தன் வாழ்க்கையே தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத் தான் நான் பி டீம். ஆறு வயதில் இருந்தே நான் 'ஏ டீம்' என்பதை 'ஏ ஒன்' ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE