மின்னணு கழிவுகளை கையாள சிறந்த வழியை சிந்திக்க வேண்டும்: மோடி

Updated : டிச 08, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: மின்னணு கழிவுகளை திறம்பட கையாளுவதற்கும், மறுசுழற்சி மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வழியை சிந்திப்பதற்கான பணிக்குழுவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.இந்திய மொபைல் சேவை சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 4வது, 'இந்தியா மொபைல் மாநாடு' டில்லியில் இன்று (டிச.,8) துவங்கியது. இதை, பிரதமர் மோடி துவக்கி
MobileTechnology, ElectronicWaste, PMModi, Mobile, பிரதமர், மோடி, மின்னணு கழிவுகள், மொபைல் தொழில்நுட்பம்

புதுடில்லி: மின்னணு கழிவுகளை திறம்பட கையாளுவதற்கும், மறுசுழற்சி மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வழியை சிந்திப்பதற்கான பணிக்குழுவை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய மொபைல் சேவை சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 4வது, 'இந்தியா மொபைல் மாநாடு' டில்லியில் இன்று (டிச.,8) துவங்கியது. இதை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நடந்த இம்மாநாடில் மோடி பேசியதாவது: கொரோனா தடுப்பூசி விரைவில் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தொற்றுநோய்க்கு எதிரான இந்த தடுப்பூசிக்கு மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மொபைல் தொழில்நுட்பம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள நன்மைகளை அளித்துள்ளது. தொற்றுநோய்களின் போது ஏழைகளுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் உதவியது.


latest tamil news


மொபைல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தான் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் ஒன்றை தொடங்கப்படவுள்ளது. மின்னணு கழிவுகளை திறம்பட கையாள்வதற்கான வழிகளை சிந்திக்க வேண்டும். தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, மொபைல் மற்றும் மின்னணு சாதனங்களை அடிக்கடி மாற்றும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. எனவே மின்னணு கழிவுகளை திறம்பட கையாளுவதற்கும், மறுசுழற்சி மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வழியை சிந்திப்பதற்கான பணிக்குழுவை உருவாக்க முடியுமா?.

எதிர்காலத்தில் லட்சக்கணக்கான இந்தியர்களை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் உயர்த்தவும், கோடிக்கணக்கான இந்தியர்களை மேம்படுத்துவதற்கும் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் சரியான நேரத்தில் வெளியாவதை உறுதி செய்ய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
09-டிச-202001:38:55 IST Report Abuse
JAYARAMAN 20 வருடங்களுக்கு முன்னால், குண்டு பல்பு அதிகமாக பயன்படுத்தினோம். Tungsten இழை அறுந்துவிட்டால், குப்பைத் தொட்டியில் வீசினோம். Mold போல் அல்லாமல், ஒவ்வொன்றையும் சொருகுவது போல் அமைத்தால் , மீண்டும் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. மேலும் பயன்படுத்தியதையே பயன்படுத்தினால் ,தயாரிப்பவர்களுக்கு லாபமா என்ற கேள்வியும் எழுகிறது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-டிச-202020:40:22 IST Report Abuse
Ramesh Sargam கழிவுகளை சிறந்த முறையில் எப்படி கையாளுவது என்று கண்டுபிடிப்பவர்களுக்கு வெகுமதி அறிவித்தால், போட்டி போட்டுக்கொண்டு நமது இளைஞர்கள் முன்வருவார்கள். ஆகையால் அறிவியுங்கள் ஒரு சிறந்த வெகுமதியை.
Rate this:
Cancel
08-டிச-202016:52:00 IST Report Abuse
ஆப்பு இதுக்கு மேலே யெல்லாம் சிந்திச்சு சிந்திச்சு வழி இல்லாமதான் எலக்ட்ரானிக் சாமான்கள் தயாரிப்பை சீனாவுக்கு தாட்டி உட்டாங்க. இப்போ இந்தியாவுக்கும் தாட்டி உடறாங்க. போதாக்குறைக்கு தடுப்பூசி தயாரிப்பும்.இங்கேதான். மருத்துவக் கழிவுகளும் இங்கே அதிகமாகும். அடுத்த கான்ஃபரன்ஸ் மருந்து கான்ஃபரன்ஸ் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X