மூணாறு : கேரளா கட்டப்பனை அருகே தகராறில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் சுக்லால்மாராண்டி 42, ஜமேஷ்மோராண்டி 32, ஆகியோரை கொலை செய்த அதே மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்பாஸ்கி 30, கைது செய்யப்பட்டார்.
இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே வலியதோவாளையில் ஜார்ஜ் என்பவரின் சொந்தமான ஏலத்தோட்டத்தில் தங்கி ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் லாற்றா பகுதியைச் சேர்ந்த சுக்லால்மாராண்டி, ஜமேஷ்மோராண்டி , அதே மாநிலம் பாரய்யாஹல் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்பாஸ்கி, வேலை செய்து வந்தனர்.அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக நேற்று முன்தினம் நள்ளிரவு தகராறு ஏற்பட்டது. கத்தியால் சுக்லால் மாராண்டி, ஜமேஷ்மோராண்டி ஆகியோரை கழுத்தை அறுத்து சஞ்சய்பாஸ்கி கொலை செய்தார்.
அவர்களுடன் வசித்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் பஷந்தியை 45, தலையில் வெட்டினார்.பின்னர் சஞ்சய்பாஸ்கி கத்தியுடன் ஏலத்தோட்டத்திற்குள் மறைந்து கொண்டார். கட்டப்பனை டி.எஸ்.பி., ராஜ்மோகன் தலைமையில் போலீசார் அங்கு தேடியபோது அவர்களை கத்தியால் தாக்கினார். அதில் டி.எஸ்.பி., ராஜ்மோகன் பலத்த காயமடைந்தார். போலீசார் போராடி சஞ்சய்பாஸ்கியை கைது செய்தனர். கட்டப்பனையில் தனியார் மருத்துவமனையில் பஷந்தி, டி.எஸ்.பி., ராஜ்மோகன் சிகிச்சை பெறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE