சென்னை : இன்று நடக்கும், நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளித்து, அதை வெற்றி பெறச் செய்வோம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க., தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்:
டில்லியில் குவிந்துள்ள விவசாயிகள், இன்று, நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அது, தங்களுக்காக மட்டுமல்ல; நமக்காக.தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகள் பறிபோகாமல் இருக்க, பட்டினிச்சாவைத் தடுத்திட, நம்மை காக்கும் விவசாயிகளை நாமும் காப்போம். அவர்களுக்கு அரணாக இருப்போம். நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளிப்போம்; அதை வெற்றி பெறச் செய்போம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மாணவிக்கு எம்.எல்.ஏ., உதவி
மதுரை வில்லாபுரத்தில் வசிக்கும் முனியசாமி, கொரோனா காலத்தால், முருக்கு வியாபாராம் செய்ய முடியாமல் நலிவடைந்துள்ளார். இதனால், அவரது இரண்டாவது மகள் கிருத்திகாதேவி, மருத்துவ கல்லுாரியின் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டார்.இதனால், அவருக்கு, திருப்பரங்குன்றம் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன், கல்விக்கான கட்டணத்தை காசோலையாக வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE