ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேலப்பாலையூரில் புதிய துணை மின்நிலையத்தை காணொலியில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கான விழாவில், புவனகிரி தி.மு.க., எம்.எல்.ஏ. சரவணன் பங்கேற்றதால், 'டென்ஷன்' அடைந்த அ.தி.மு.க.வினர், வெளியேறினர்.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மேலப்பாலையூரில், ரூ. 7 கோடியே 33 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட, 110 கே.வி., துணை மின் நிலையத்தை, நேற்று மதியம் காணொலியில் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
தி.மு.க., எம்.எல்.ஏ., பங்கேற்றதால் பரபரப்பு
இவ்விழாவில் தி.மு.க., எம்.எல்.ஏ., சரவணன் பங்கேற்று, ரிப்பன் வெட்டி, துணை மின் நிலைய கட்டடத்தை திறந்து வைத்தார். இதற்கு, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு வழிகாட்டுதலில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக, அதிகாரிகள் கூறினர்.பின்னர், புதிய கட்டடத்தில், அ.தி.மு.க.வை சேர்ந்த ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய சேர்மன் லதா ஜெகஜீவன்ராம் குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து, எம்.எல்.ஏ., சரவணன் மற்றும் அதிகாரிகள் விளக்கேற்றினர். இதனால் 'டென்ஷன்' அடைந்த அ.தி.மு.க.,வினர், விழா அரங்கில் இருந்து வெளியேறினர்.
நிகழ்ச்சியில், விருத்தாசலம் செயற்பொறியாளர் சுகன்யா, உதவி செயற்பொறியாளர்கள் பாரதி, புவனேஸ்வரி, நாராயணசாமி, உதவி மின் பொறியாளர் பாரதிதாசன்,அ.தி.மு.க., ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் நவநீத கிருஷ்ணன், கம்மாபுரம் ஒன்றிய சேர்மன் மேனகா விஜயகுமார், ஒன்றிய இணை செயலாளர் சுமதி மாயகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் பவானி செல்வகுமார், கம்மாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, மாஜி சேர்மன் செல்வராஜ், ஊராட்சித் தலைவர்கள் விருத்தகிரி, வெங்கடேசன், விவசாய சங்கம் பாலமுருகன், கிளை நிர்வாகிகள் முருகன், ராஜவேல், பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE