அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழர்களின் அவமான சின்னம்: ஆ.ராஜா மீது ஜெயகுமார் காட்டம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
சென்னை : ''தமிழர்களின் அவமான சின்னம், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.அவர் அளித்த பேட்டி:சர்க்காரியா கமிஷன், பூச்சி மருந்து ஊழல், சர்க்கரை ஊழல், கோதுமை ஊழல், வீராணம் ஊழல் என, அனைத்தையும் முழுமையாக செய்ததால், ஊழலுக்காக கலைக்கப்பட்டது, தி.மு.க., ஆட்சி.ஊழலின் ஒட்டு மொத்த நாயகன், தி.மு.க.,வும், ஸ்டாலினும் தான். தி.மு.க., முன்னாள்

சென்னை : ''தமிழர்களின் அவமான சின்னம், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
சர்க்காரியா கமிஷன், பூச்சி மருந்து ஊழல், சர்க்கரை ஊழல், கோதுமை ஊழல், வீராணம் ஊழல் என, அனைத்தையும் முழுமையாக செய்ததால், ஊழலுக்காக கலைக்கப்பட்டது, தி.மு.க., ஆட்சி.ஊழலின் ஒட்டு மொத்த நாயகன், தி.மு.க.,வும், ஸ்டாலினும் தான். தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும், ஊழல் வழக்குகள் உள்ளன. எல்லாரும் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படும்.ஜெ., அரசு வெளிப்படை தன்மையுடன், எந்த புகாரிலும் சிக்காமல் உள்ளது. மக்களை திசை திருப்பும் வகையில், குற்றச்சாட்டு கூறுவதை, யாரும் ஏற்க மாட்டார்கள். வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தி வருகிறோம்.
ஊழலின் ஒட்டு மொத்த கட்சி, தி.மு.க., தான்.சர்க்காரியா கமிஷன் போட்டதால், இந்திரா காலில் விழுந்தனர். அதன்பின், சர்க்காரியா கமிஷன், வாபஸ் பெறப்பட்டது. இந்திராவை கொச்சையாக பேசி, ஏளனப்படுத்தி விட்டு, அவரோடு கூட்டணி வைத்தனர். ஆதரவு கொடுத்ததால், சர்க்காரியா கமிஷன் வாபஸ் பெறப்பட்டது. அதன்பின், இந்தியாவே தலைகுனியும் அளவுக்கு, '2ஜி' அலைக்கற்றை ஊழல் செய்தனர். இதை, ஜெ., அம்பலப்படுத்தினார்.
ஆ.ராஜாவின் அன்றைய நிலை என்ன; இன்றைய நிலை என்ன என்பதை, கூற வேண்டும்.தமிழர்களின் அவமான சின்னம் ராஜா. அவர், காங்கிரஸ் ஆட்சியில், டில்லி திகார் சிறையில், ஒன்றரை ஆண்டுகள் இருந்தார். தி.மு.க., எப்படிப்பட்ட கட்சி என்பதை, மக்கள் உணர்ந்துள்ளனர். தி.மு.க., ஆட்சியில் ஸ்டாலினால், மதுரை செல்ல முடியவில்லை. ஜெ., முதல்வரான பின் தான், அவரால் செல்ல முடிந்தது.
இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X