01. டில்லியில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் தந்தையை கொலை செய்த சுரஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

02. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் குடும்பச்சண்டை காரணமாக மனைவி சிவ்கன்வாரை கணவர் விக்ரம்சிங் கத்திரிக்கோலால் குத்தி கொன்றார்.
03. அசாமை சேர்ந்த சுரங்க வியாபாரிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய ரெய்டில் ரூ.150 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியது.
தமிழகத்தின் நிகழ்வு
01. கோவை ரத்தினபுரியில் வசித்து வந்தவர் விவேக். இவர் காதலித்த பெண் திருமணத்திற்கு மறுக்கவே ஆத்திரமுற்ற அவர் இளம்பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தானும் விஷம் குடித்தார். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
02. திருப்பத்தூர் ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய லாரியில் 2 டன் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
03. கோவை கருமத்தம்பட்டியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் தலைவர் கைது .
உலக நடப்பு !

01. காலையில் கூவிய சேவலை சுட்டுக்கொன்ற நபருக்கு பிரான்ஸ் நாட்டில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாட்டின் அர்டெக் என்ற பகுதியில் செபஸ்டின் என்பவர் செக்கச்செவெலென சேவல் ஒன்றை வளர்த்தார். சேவலுக்கு பெயர் அப்தா மார்சல். இது காலையில் தினமும் கூவியதால் ஆத்திரமுற்ற பக்கத்து வீட்டுக்காரர் துப்பாக்கியால் சுட்டதுடன் கம்பியால் குத்தி கொன்றார். இந்த வழக்கில் சேவல் உரிமையாளர், குற்றவாளிக்கு எதிராக பல ஆயிரம் பேரிடம் மனுவில் கையொப்பம் பெற்றார். மனுவை விசாரித்த கோர்ட் குற்றவாளிக்கு சிறைத்தண்டனையும், 300 யூரோக்கள் அபராதமும் விதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE