கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் மனைவிக்கு இழப்பீடு

Added : டிச 08, 2020
Share
Advertisement
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன், 55. முதுநிலை ஆசிரியர்; 2017 டிசம்பரில், குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லுாரி சிக்னலில், தன் பைக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக பின்புறம் வந்த பைக், இவரின் பைக் மீது மோதியது. பலத்த காயமடைந்த மதிவாணன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.தன் கணவரின் இறப்பிற்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, மதிவாணனின் மனைவி

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன், 55. முதுநிலை ஆசிரியர்; 2017 டிசம்பரில், குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லுாரி சிக்னலில், தன் பைக்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேகமாக பின்புறம் வந்த பைக், இவரின் பைக் மீது மோதியது. பலத்த காயமடைந்த மதிவாணன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.தன் கணவரின் இறப்பிற்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, மதிவாணனின் மனைவி முத்தரசி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, 'மனுதாரருக்கு இழப்பீடாக, 27.63 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், மனுதாரர் கணவரின் கவனக் குறைவுக்காக, 10 சதவீதம் குறைக்கப்பட்டு, 24.86 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடாக, டாடா ஏ.ஐ.ஜி., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X