தனிமைப்படுத்துதல் அறையில் இருந்து வெளியே வந்தவருக்கு அபராதம்

Updated : டிச 08, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
தைபே: தைவான் நாட்டில் கொரோனாவுக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த நபர், அறையை விட்டு 8 நொடிகள் வெளியே வந்ததால் அவருக்கு அந்நாட்டு மதிப்பில் ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.2.6 லட்சமாகும்.பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் தைவான் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அவர், தனியார்
Taiwan, WorkerLeaves, HotelRoom, 8Seconds, Fined, QuarantineBreach, தைவான், தனிமைப்படுத்துதல், ஹோட்டல் அறை, அபராதம்

தைபே: தைவான் நாட்டில் கொரோனாவுக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த நபர், அறையை விட்டு 8 நொடிகள் வெளியே வந்ததால் அவருக்கு அந்நாட்டு மதிப்பில் ஒரு லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.2.6 லட்சமாகும்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் தைவான் நாட்டில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அவர், தனியார் ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டார். தனிமைப்படுத்துதலில் உள்ளவர்கள் அறையை விட்டு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அனுமதியை மீறி அறையைவிட்டு வெளியே வந்த அவர், எதிரே இருந்த மற்றொரு நோயாளியின் அறைக்கு வெளியே உள்ள மேஜையில் ஏதோ ஒன்றை வைத்துவிட்டு சென்றுள்ளார். வெறும் 8 நொடிகள் மட்டுமே நடந்த இந்த நிகழ்வு அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.


latest tamil news


இந்நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுத்த தைவான் அரசு, அவருக்கு அந்நாட்டின் மதிப்புப்படி 1 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 2.6 லட்சம் ரூபாயாகும். கொரோனா பரவல் காரணமாக தைவான் நாட்டில், கண்டிப்புடன் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-டிச-202021:56:05 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவில் வைரஸ் பரவிய முதல் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே டீ குடிக்க வெளியே சென்றார்கள், ருசியான உணவு சாப்பிட வீட்டிற்கு சென்றார்கள், ஒரு சிலர் மீண்டும் திரும்பி செல்லவே இல்லை. தைவான் நாட்டைப்போன்று அபராதம் விதித்திருந்தால் நம்நாட்டிலும் வைரஸ் தாக்கம் மிகவும் குறைந்து இருக்கும்.
Rate this:
Cancel
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
08-டிச-202020:18:57 IST Report Abuse
SUDHAKAR இந்தியாவில் அப்படி செய்தால் பல லக்ஷம் கோடி வசூல் ஆகி இருக்கும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-டிச-202017:22:45 IST Report Abuse
தமிழவேல் நம்ம தலைகளே முகக்கவசம் இல்லாம கூட்டம் கூட்டுறாங்களே... அவங்களுக்கும் இது போல செய்யணும். கட்சி தானே கட்டப் போகுது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X