பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் பரவ வேண்டும்: அன்னா ஹசாரே

Updated : டிச 08, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
மும்பை: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இன்று நாடு முழுவதும் பந்த் நடைபெற்றது. சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.மத்திய அரசு செப்டம்பரில் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தால் மண்டி முறை இல்லாமல் போய்விடும், கார்ப்ரேட்கள் ஆதிக்கம் அதிகரிக்கும், குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என எதிர்ப்பு
BharatBandh, AnnaHazare, SupportFarmers, Agitation, Spread, AcrossCountry, பாரத் பந்த், விவசாயிகள், போராட்டம், அன்னா ஹசாரே

மும்பை: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி இன்று நாடு முழுவதும் பந்த் நடைபெற்றது. சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

மத்திய அரசு செப்டம்பரில் புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தால் மண்டி முறை இல்லாமல் போய்விடும், கார்ப்ரேட்கள் ஆதிக்கம் அதிகரிக்கும், குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக மண்டி முறை பெரியளவில் செயல்படும் பஞ்சாப், ஹரியானாவில் இப்போராட்டம் வலுத்தது. தற்போது வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை நகர மாட்டோம் என டில்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news


அதன் ஒரு பகுதியாக இன்று நாடு தழுவிய பந்திற்கு அழைப்பு விடுத்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரேவும் களமிறங்கியுள்ளார். இவர் 2011-ல் காங்கிரஸ் அரசின் ஊழல்களை எதிர்த்து டில்லியில் பெரியளவில் போராட்டம் நடத்தினார். லோக்பால் சட்டம் கொண்டு வர காரணமானார். இன்று தனது சொந்த கிராமமான மஹா., மாநிலம் ராலேகான் சித்தியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து அவர் பேசியதாவது: டில்லியில் நடந்து வரும் போராட்டம் நாடு முழுவதும் பரவ வேண்டும் என நான் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அரசாங்கத்திற்கு அழுத்தம் தர விவசாயிகள் வீதிகளுக்கு வர வேண்டும். ஆனால் யாரும் வன்முறையில் இறங்கக் கூடாது. விவசாயிகள் தங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொள்வதற்கு இதுவே சரியான தருணம்.

நான் முன்னரே எனது ஆதரவை தெரிவித்தேன். மேலும் தொடர்ந்து ஆதரவளிப்பேன். விவசாய விளைபொருட்களுக்கான ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். அரசு வாக்குறுதிகளை மட்டுமே வழங்குகிறது. அதை நிறைவேற்ற தவறுகிறது. என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-டிச-202017:10:23 IST Report Abuse
Malick Raja மஹாராஷ்டிராவில் கொரோனாவே இல்லை என்பது தெளிவாகிவிட்டது
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்., - தமிழகம்,இந்தியா
09-டிச-202010:29:03 IST Report Abuse
தமிழ்வேள் வயதான காலத்தில் புத்தி தடுமாற்றம் ஏற்படுவது இயல்பே ...பரிதாபத்துக்குரிய ஆத்மா ...
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
09-டிச-202010:01:49 IST Report Abuse
vbs manian ஒரு காலத்தில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். இன்றைய சூழ்நிலையில் செல்லாகாசாகி விட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X