அமைதியாக நடந்தது 'பாரத் பந்த்':சில மாநிலங்களில் பாதிப்பு! 

Updated : டிச 10, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (8+ 18)
Share
Advertisement
புதுடில்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகள் விடுத்த அழைப்பின்படி, 'பாரத் பந்த்' எனப்படும், வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுதும் நேற்று அமைதியாக நடந்தது. சில மாநிலங்களில் மட்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.மத்திய அரசின், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் போராடி வருகின்றனர்.
சில மாநிலங்கள், இயல்பு வாழ்க்கை, பாதிப்பு, அமைதி, பாரத்பந்த்,

புதுடில்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகள் விடுத்த அழைப்பின்படி, 'பாரத் பந்த்' எனப்படும், வேலை நிறுத்தப் போராட்டம் நாடு முழுதும் நேற்று அமைதியாக நடந்தது. சில மாநிலங்களில் மட்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மத்திய அரசின், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம், 13வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையிலான, மூன்று அமைச்சர்கள் குழு, ஐந்து சுற்று பேச்சு நடத்தியது. முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, இன்று, ஆறாம் சுற்று பேச்சு நடக்க உள்ளது.


ஆதரவு


இந்நிலையில், பஞ்சாப் விவசாய சங்கங்கள், பாரத் பந்த் எனப்படும், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன; இதற்கு, பல எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.அதன்படி, நாடு முழுதும் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று நடந்தது. பஞ்சாப், பீஹார், ஒடிசா, ஹரியானா உட்பட சில மாநிலங்களில், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பெரும்பாலான மாநிலங்களில், சாலை, ரயில்களை மறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில், நாடு முழுதும் இந்தப் போராட்டம் அமைதிஆக நடந்தது.

''நாட்டின், 25 மாநிலங்களில், 10 ஆயிரம் இடங்களில் போராட்டம் நடந்தது,'' என, சுவராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.போராட்டத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ள பஞ்சாப், ஹரியானா, டில்லியில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் பங்கேற்றவர்கள், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். அவசர சேவைகள் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்படவில்லை.

அதேபோல், ஒடிசா, மஹாராஷ்டிரா, பீஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும், இயல்பு வாழ்க்கை ஓரளவுக்கு பாதிக்கப்பட்டது.மேற்கு வங்கம், பீஹார், ஒடிசா மாநிலங்களில், பல இடங்களில், சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை வழிமறித்து, போராட்டங்கள் நடந்தன. டில்லியை ஒட்டியுள்ள அண்டை மாநில எல்லைகளில், ஏற்கனவே விவசாயிகள் குவிந்துள்ளனர். அங்கு பல கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மோதல்


இதனால், டில்லி எல்லைப் பகுதிகளில் போராட்டம் தீவிரமாக இருந்தது. ஆனால், அமைதியாக நடந்தது.காங்கிரசை சேர்ந்த, முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு அமைந்துள்ள ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், காங்., மற்றும் பா.ஜ., தொண்டர்கள் இடையே மோதல்
ஏற்பட்டது. தலைநகர் டில்லியில், பெரும்பாலான சந்தைகள் திறந்திருந்தன. மேற்கு வங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்., ஆகியவை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
ஆளும் திரிணமுல் காங்.,கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், 'கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட மாட்டோம்' என, அந்தக் கட்சி கூறியிருந்தது. அதன்படி, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் போராட்டம் நடந்தது.

பீஹாரில், தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடந்தது. ஒடிசாவிலும் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன.மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, தேசிய வாத காங்., காங்கிரஸ் கூட்டணி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அங்கு, மொத்த விற்பனை மார்க்கெட்கள் மூடப்பட்டிருந்தன.பல மாவட்டங்களில், கடைகள் மூடப்பட்டிருந்தன. அதே நேரத்தில், பொது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

பெரும்பாலான மாநிலங்களில், எதிர்க்கட்சிகள், ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. பொதுவாக, வேலை நிறுத்தப் போராட்டம், சில மாநிலங்களில் மட்டுமே, இயல்பு வாழ்க்கையை பாதித்தது. ஒட்டுமொத்தமாக, அமைதியாக முடிந்தது.


ரூ.2,000 கோடி இழப்பு


வேலை நிறுத்தப் போராட்டத்தில், 95 லட்சம், டிரக், லாரி உரிமையாளர்கள் பங்கேற்றதாக, அனைத்திந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் என்ற தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
வெற்றிகரமாக நடந்த போராட்டத்தால், போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, இந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.


ஜனாதிபதியிடம் முறையீடு


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், நேற்று கூறியதாவது:விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைத்து கட்சிகளும் கூடி, இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க உள்ளோம். அதன்பின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.எதிர்க்கட்சிகள் குழு, ஜனாதிபதியை, இன்று சந்திக்க உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (8+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
09-டிச-202016:27:14 IST Report Abuse
vbs manian பத்து ஏக்கர் மேல் வைத்து விவசாயம் செய்வபவர்கள் வருமான வரி கட்ட வேண்டும் என்ற சட்டம் வர வேண்டும்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
09-டிச-202015:16:17 IST Report Abuse
Thiagarajan Kodandaraman பாரத் பந்த் தமிழ் மொழியா சுடலை சாரே ...இது எந்த புலவரால் எழுதிய வார்த்தை ..கொஞ்சம் விளக்குங்க
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
09-டிச-202010:22:17 IST Report Abuse
vbs manian ethirppu vivasayidam இல்லை. வாங்குவோர் விற்போர் தங்கள் பாண் நும்பரை பதிவு செய்யவேண்டும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் பரிவர்த்தனை வருமான வரி சட்டத்தின் கீழ் வரும். வரி கட்டாதவர்கள் இனிமேல் தங்கள் பரிவர்த்தனை பணத்தின் மீது வரி செலுத்த வேண்டும். இது தான் ப்ரோக்கர்களை பினாமி அரசியல் தலைகளை உலுக்கி விட்டது. ஆகவே வாழ்வா சாவா என்ற போராட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X