அடுத்த ஆண்டில் '5ஜி' சேவை: முகேஷ் அம்பானி சூசகம்

Updated : டிச 10, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (21) | |
Advertisement
புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், 5ஜி சேவைகளை துவங்க வாய்ப்பிருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். நடவடிக்கைநேற்று, புதுடில்லியில் துவங்கிய,'இந்திய மொபைல் காங்கிரஸ் 2020' தொழில்நுட்ப கண்காட்சியில் துவக்க உரை ஆற்றிய, முகேஷ் அம்பானி மேலும் பேசியதாவது:தொழில்நுட்ப ரீதியாக, சிறப்பாக இணைக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக, இந்தியா
5ஜிசேவை, முகேஷ் அம்பானி, சூசகம்

புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், 5ஜி சேவைகளை துவங்க வாய்ப்பிருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.


நடவடிக்கை


நேற்று, புதுடில்லியில் துவங்கிய,'இந்திய மொபைல் காங்கிரஸ் 2020' தொழில்நுட்ப கண்காட்சியில் துவக்க உரை ஆற்றிய, முகேஷ் அம்பானி மேலும் பேசியதாவது:தொழில்நுட்ப ரீதியாக, சிறப்பாக இணைக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக, இந்தியா தற்போது உள்ளது. இந்த நிலை தொடர, நாட்டில் விரைவாக, 5ஜி சேவையை அறிமுகம் செய்வதோடு; அது, மலிவாக அனைத்து இடங்களிலும் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது.

அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின், 5ஜி புரட்சிக்கு, ஜியோ முன்னோடியாக இருக்கும். அதுமட்டுமின்றி; அரசின் எழுச்சிமிக்க, 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்திற்கு, ஒரு சாட்சியாகவும் அது விளங்கும். இருப்பினும், நாட்டில் இன்னும், 30 கோடி பேர், 2ஜி காலத்திலேயே பின்தங்கி இருக்கிறார்கள். இந்த வறிய மக்களுக்கு, மலிவு விலையில் ஸ்மார்ட்போன் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தேவை.இதனால் அவர்களும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கு கொண்டு, அரசின் உதவிகளை, நேரடியாக அவர்களே பெற்று பயனடைய முடியும்.


5 லட்சம் கோடி


இந்தியா, இரண்டு தனித்துவமான பலங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று துடிப்பான ஜனநாயகம், இளைஞர்களை அதிகம் கொண்ட மக்கள் தொகை, டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றின் கூட்டாகும். இரண்டாவது, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் அவரது ஆற்றல் மிக்க தலைமை. இந்த இரண்டு பலங்களின் மூலம், இந்தியா, 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக விரைவில் உயரும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


விண்வெளி துறையில் தனியார்


'விண்வெளித் துறையில், தனியார் நிறுவனங்கள் பங்கெடுப்பது குறித்த ஓர் ஆலோசனையை, பிரதமர் வெளியிட்டுள்ளார். 'அவரது தொலைநோக்கு பார்வை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்' என, பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் கூறியதாவது: ஏர்டெல் நிறுவனம், பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணைந்து, உலகின் ஒவ்வொரு சதுர அங்குலத்துக்கும், பிராட்பேண்டு இணைப்பை வழங்குவதற்கான, செயற்கைகோளை அமைக்க இருக்கிறது. இதேபோல், இந்தியாவின் இஸ்ரோ, மற்றும் விண்வெளி துறையினர், தனியார் துறைக்கு அழைப்பு விடுத்தால், விண்வெளி தகவல் தொடர்பு துறையிலும், இந்தியா முன்னிலை வகிக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh Rajan - Bangalore,இந்தியா
09-டிச-202017:40:36 IST Report Abuse
Rajesh Rajan என்னிடம் இருக்கும் இரு நம்பர்களும் ஒழுங்காக வேலை செய்யும் வகையில் 4G நெட்ஒர்க் முதலில் கொடுக்க முயற்சி செய்ங்க
Rate this:
Cancel
Senthil Kumar - chennai,இந்தியா
09-டிச-202017:03:09 IST Report Abuse
Senthil Kumar கொக்கி குமாரு போயஸ் கார்டன் போயி பாரு பெட்டிக்கடை, கார்பொரேட் வித்தியாசம் தெரியும்
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
09-டிச-202015:23:23 IST Report Abuse
Appan அதென்ன தொழில் அதிபர்களை இழிவா பேசும் கலாச்சாரம்..?. எல்லோரும் இப்படி தொழில் முனைவர்களை சாடினால் சாப்பாட்டிற்கு எங்கே போவது..?. இவர்களில் சிலர் ஏமாற்றி இருக்கிறார்கள்..அதற்க ஒட்டு மொத்த தொழில் அதிபர்களை இப்படி வசை படலாமா.?. யாராவது இந்திய பொது துறை நிறுவனங்கள் - HAL BEL BHEL Railways OIL ONGC BSNL Bank வேலை செய்வதை பார்த்து இருக்கிறியர்களா..?. தொழிற்ச்சாலைக்கு வந்து attence கோடுத்தால் மட்டும் போதும் சம்பளம் கிடைக்கும்..இப்படி ஒரு தொழிலை நடத்த முடியுமா..?> அது போக யூனியன் என்று கூட்டம் குருடமாக பாக்ட்ரிக்குள் சுத்துவார்கள். யாரும் இவர்களை கேள்வி கேட்க முடியாது..அப்புறம் அரசியல்வாதிகள் அவர்களுக்கு வேண்டியவர்களை பெரிய பதவியில் நியமித்து கொள்ளை அடிப்பார்கள்..ஒரு நாடு இப்படி இருக்கலாமா..?.கம்ராட்கள் கஷ்டப்படாமல் வாழலாம் என்று எல்லோரையில் வேலை செய்ய வேண்டாம் என்பார்கள். இங்கு பதிவு செய்யும் பல கருத்துக்கள் இதை தான் சொல்கிறது.. உலகில் வேலை செய்யாமல் கஷ்ட படாமல் யாரும் வாழ முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X