பரமக்குடி, : ராமநாதபுரம் மாவட்டம்வைகை ஆறு முகத்துவாரத்தில் கட்டப்பட்ட பார்த்திபனுார் மதகு அணை முழுவதும் நாணல் மற்றும் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன.
தண்ணீர்செல்வதில் சிக்கல் நீடிப்பதால் விவசாயிகள்வேதனை தெரிவிக்கின்றனர். வைகை அணையில் தேக்கப்படும் தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை தண்ணீர்திறக்கப்படும் நிலையில், பார்த்திபனுார் மதகில் இருந்து வைகை ஆறு வழியாக, ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கும், வலது, இடது பிரதான கால்வாய் மூலம் நுாற்றுக்கணக்கான கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்கிறது.ஆனால் மதகு அணை தொடங்கி, மாவட்ட எல்லை வரை நாணல்மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
முக்கியமாக ஆற்றில் மணல் கொள்ளையால் கட்டாந்தரையாகி வருவதால் இந்நிலை அதிகரித்துள்ளது.தொடர்ந்து கண்மாய்களை துார்வரும் அரசு, நீர் நிலைகளுக்கு தேவையான தண்ணீரைகொண்டு செல்லும் நீர் வழிப்பாதைகளை சீர்செய்வதில் அக்கறை செலுத்துவ தில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இதனால் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீர்,சேமிக்க முடியாமல் போவதுடன், உறிஞ்சப்படும் நீரும் சில மாதங்களிலேயே இது போன்ற தேவையற்ற செடி,மரங்கள் என வளர ஏதுவாகி தண்ணீர் பயனின்றி செல்கிறது.
ஆகவே மணல் கொள்ளையை முற்றிலும் தடுப்பதுடன், மதகு மற்றும்அதனையொட்டிய ஆறுகளை துாய்மைப்படுத்தி சீராக தண்ணீர் கடந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE