ராமநாதபுரம் : சாகச பயணம் செய்ய விரும்புவோர் மழை காலத்தில் ராமநாதபுரம்மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக சாலையை தேர்வு செய்யலாம்.
மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செல்ல ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள சாலை(சாலை மாதிரி) வழியாகவும், மற்றொரு புறம் லஞ்ச ஒழிப்புத் துறை அருகே உள்ள சாலை வழியாக இந்திய நுகர்பொருள் வாணிப கழகம் வழியாக செல்ல வேண்டும்.இந்த இரு வழிப்பாதையும் மோசமாக பள்ளங்களுடன் குண்டும் குழியுமாக உள்ளது. தார் சாலை என்பதற்கான அறிகுறியே இல்லாமல் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த சாலையில் செல்வோர் பல பள்ளங்களில் விழுந்து சாகச பயணம் செய்கின்றனர். அலுவலகம் அருகே பல இடங்களில் உள்ள பள்ளத்தில் தற்போது மழை நீர் தேங்கியுள்ளது. மின்கட்டணம் செலுத்தவும், அலுவலகப் பணியாகவும் இருசக்கர வாகனங்களில் வருவோர் இந்த பள்ளங்களில் சிக்கி அவதிப்படுகின்றனர்.இச்சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள நிலையில், இதனை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என இப்பகுதி குடியிருப்போர், மின் வாரிய பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE