கீழக்கரை : கீழக்கரையில் மக்கள் நலபாதுகாப்புக் கழகத்தின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
தலைவர் தமீமுதீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் முகைதீன் இப்ராகீம் வரவேற்றார். இணைச் செயலாளர் செய்யது சாகுல் ஹமீது, துணைச் செயலாளர் செய்யது காசீம், பொருளாளர் முகம்மது சாலிஹ் உசேன், செய்தி தொடர்பாளர்முகம்மது இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர்.கீழக்கரை மின்வாரிய அலுவலகத்தில் காலியாகஉள்ள பணியிடங்களை நிரப்பிடவும், கீழக்கரையில் புதியதாக கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை திறக்கக்கோரியும், நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்படுத்த கூடுதல் போலீசாரை நியமிக்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.செயற்குழு உறுப்பினர்அல்லா பக்ஸ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE