வெள்ள சேத ஆய்வு முடிந்தது: முதல்வருடன் மத்திய குழு சந்திப்பு

Updated : டிச 10, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழுவினர், நேற்று சென்னையில், முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மாலையில், டில்லி புறப்பட்டு சென்றனர்.வங்கக் கடலில் உருவான, 'நிவர்' புயல், நவம்பர், 25 நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடந்தது. சேத மதிப்பீடு புயல் மற்றும் கனமழை காரணமாக, தமிழகத்தில்,
மத்திய குழு, முதல்வருடன் சந்திப்பு, வெள்ளசேதம்,

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில், புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழுவினர், நேற்று சென்னையில், முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். மாலையில், டில்லி புறப்பட்டு சென்றனர்.

வங்கக் கடலில் உருவான, 'நிவர்' புயல், நவம்பர், 25 நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடந்தது.


சேத மதிப்பீடு


புயல் மற்றும் கனமழை காரணமாக, தமிழகத்தில், சென்னை, கடலுார், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது.பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, சேதம் மதிப்பு குறித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க, மத்திய உள்துறை இணை செயலர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான, எட்டு பேர் குழுவை, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு, மத்திய அரசு அனுப்பியது.


இக்குழுவினர், இம்மாதம், 5ம் தேதி மதியம் சென்னை வந்தனர். அன்று, தலைமை செயலர் சண்முகம் தலைமையில் நடந்த, அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், சேதம் மதிப்பீடு குறித்த விபரம், மத்திய குழுவிடம் சமர்பிக்கப்பட்டது.தமிழகத்திற்கு, தற்காலிக நிவாரணமாக, 650 கோடி ரூபாய், உடனடி சீரமைப்பிற்கு, 3,108 கோடி ரூபாய் என, மொத்தம், 3,758 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


மறுநாள், மத்திய குழுவினர், இரண்டு குழுக்களாக பிரிந்து, சென்னை, செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும், புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை, நேரில் பார்வையிட்டனர்.


ஆலோசனை


பின், இக்குழுவினர் நேற்று, தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து பேசினர்.சந்திப்பின் போது, அமைச்சர்கள் ஜெயகுமார், உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் உடனிருந்தனர்.அப்போது, புயல் சேதம் குறித்த அறிக்கையை, விரைவாக மத்திய அரசிடம் அளிக்கும்படி, முதல்வர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.முதல்வருடனான சந்திப்பு முடிந்த பின், அதிகாரிகளுடன் தனியே, மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதன்பின், மாலை, 5:30 மணிக்கு, சென்னையில் இருந்து விமானத்தில், மத்திய குழுவினர், டில்லி புறப்பட்டு சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-டிச-202012:30:27 IST Report Abuse
தமிழ் பேரம் முடிந்ததா.
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
09-டிச-202011:35:06 IST Report Abuse
Srinivas.... கும்பல் ஆட்டைய போட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வந்து சேரப்போவது கடுகளவுகூட இருக்காது. எல்லாமும் அமுக்கப்பட்டு பினாமி பெயரில் எங்காவது பதுக்கப்பட்டுவிடும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-டிச-202006:55:10 IST Report Abuse
Mani . V ஆபீஸர்ஸ், அப்படியே எங்களுக்கும் சில ஆயிரம் கோடிகளை ஒதுக்குங்கள். இன்னும் மூன்று மாதத்துக்குள் அறுவடை செய்தால்தான். பிறகு என்னவாகும்? என்று சொல்ல முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X