ஐதராபாத்: ஆந்திர மாநிலம் எலுருவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் ரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் தடயங்கள் இருந்ததாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 5 ஆம் தேதி ஆந்திராவின் எலுருவில் 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயதுக்குட்பட்ட 45 பேருக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குமட்டல் எடுத்து மயக்கம் வந்ததாக புகார் தெரிவித்தனர். 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நோயின் தன்மையை அறிய முயன்ற மருத்துவர்கள் அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் தடயங்கள் இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில்,"இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களால் கூடுதல் சோதனைகள் நடத்தப்படுகின்றன, இதன் முடிவுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவ குழுவினர்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மயக்கம் ஒரு முறை மட்டுமே ஏற்படும். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மயக்க அறிகுறி ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை எனவும் மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE