பொது செய்தி

இந்தியா

அதிகம் பகிரப்பட்ட பதிவாக மோடியின் 'டுவிட்' தேர்வு

Added : டிச 08, 2020
Share
Advertisement
புதுடில்லி:'டுவிட்டர்' சமூகவலைதளத்தில், அரசியல் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளில், அதிகமுறை பகிரப்பட்ட பதிவாக, பிரதமர் நரேந்திர மோடியின் பதிவு, தேர்வாகி உள்ளது.'டுவிட்டர்' சமூகவலைதளத்தில், ஒருவர் பதிவிடும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை, மற்ற பயனாளர்கள் தங்கள் பக்கங்களில் பகிரும் வசதி உள்ளது. இது, 'ரீ - டுவீட்' என அழைக்கப்படுகிறது.அந்த வகையில், இந்த ஆண்டு

புதுடில்லி:'டுவிட்டர்' சமூகவலைதளத்தில், அரசியல் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளில், அதிகமுறை பகிரப்பட்ட பதிவாக, பிரதமர் நரேந்திர மோடியின் பதிவு, தேர்வாகி உள்ளது.
'டுவிட்டர்' சமூகவலைதளத்தில், ஒருவர் பதிவிடும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை, மற்ற பயனாளர்கள் தங்கள் பக்கங்களில் பகிரும் வசதி உள்ளது. இது, 'ரீ - டுவீட்' என
அழைக்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு அதிகமுறை பகிரப்பட்ட மற்றும் விரும்பப்பட்ட பதிவுகளின்
பட்டியலை, 'டுவிட்டர் இந்தியா' நிறுவனம்வெளியிட்டுள்ளது.அதில், பிரதமர் மோடியின் பதிவு,
முதலிடம் பிடித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் இறுதியில், முதல்கட்ட கொரோனா ஊரடங்கை அறிவித்தார்.

அப்போது, ஏப்ரல், 5ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, நாட்டு மக்கள் அனைவரும், 9 நிமிடங்களுக்கு, வீட்டின் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, தீபம் ஏற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்.இது தொடர்பாக, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், பிரதமர் விளக்கேற்றும் புகைப்படத்துடன், பதிவு ஒன்றையும்வெளியிட்டார்.இந்த பதிவு, ஒரு லட்சத்து, 18 ஆயிரம் முறை பகிரப்பட்டுள்ளது. மேலும், இந்த பதிவுக்கு, ஐந்து லட்சத்து, 13ஆயிரம் பேர், விருப்ப குறி இட்டுள்ளனர்.

இந்த ஆண்டு, அதிகமுறை பகிரப்பட்ட அரசியல் தலைவரின் பதிவாக, பிரதமர் மோடியின் பதிவு தேர்வாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X