பொது செய்தி

இந்தியா

சவுதி புறப்பட்டார் ராணுவ தலைமை தளபதி

Added : டிச 08, 2020
Share
Advertisement
புதுடில்லி:மேற்காசிய நாடுகளான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவுக்கு, ஆறு நாள் பயணமாக, நம் ராணுவத் தலைமை தளபதி, எம்.எம்.நரவானே, நேற்று புறப்பட்டார்.யு.ஏ.இ., மற்றும் சவுதி அரேபியா உடனான நம் நட்புறவு, கடந்த சில ஆண்டுகளில் மிகவும் வலுவடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் உட்பட வர்த்தக உறவு வலுப்பட்டுள்ள நிலையில், ராணுவ ஒத்துழைப்பும்

புதுடில்லி:மேற்காசிய நாடுகளான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவுக்கு, ஆறு நாள் பயணமாக, நம் ராணுவத் தலைமை தளபதி, எம்.எம்.நரவானே, நேற்று புறப்பட்டார்.

யு.ஏ.இ., மற்றும் சவுதி அரேபியா உடனான நம் நட்புறவு, கடந்த சில ஆண்டுகளில் மிகவும்
வலுவடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் உட்பட வர்த்தக உறவு வலுப்பட்டுள்ள நிலையில், ராணுவ ஒத்துழைப்பும் மேம்பட்டுள்ளது.பஹ்ரைன், யு.ஏ.இ.,க்கு, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் பயணித்தார்; அதைத் தொடர்ந்து, ராணுவத் தலைமை தளபதி நரவானே, ஆறு நாள் பயணமாகநேற்று புறப்பட்டார்.

முதலில், யு.ஏ.இ.,க் கும், அதன்பின், சவுதி அரேபியாவுக்கும் அவர் செல்கிறார். இந்த பயணத்தின் போது, அந்த நாடுகளின் ராணுவத் தலைமை தளபதிகள், உயரதிகாரிகள், அரச குடும்பத்தினரையும், அவர் சந்திக்கிறார்.ராணுவத் தலைமை தளபதி ஒருவர், மேற்காசிய நாடுகளுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X