சிவகங்கை : உண்டியலில் சேமித்த பணத்தை சுழலியலை பாதுகாக்க நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்ய குழந்தைகள் வழங்கினர்.
சிவகங்கை இலந்தங்குடி பகுதியில் நீர்நிறை குழுவின் சார்பில் கிராமப்புறங்களில் சுழலியலை பாதுகாக்க நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது குழந்தைகள் ஹன்சிகா ஸ்ரீ 11, ஜெய்மித்ரா 6, தாங்கள் உண்டியலில் சேமித்த பணம் 5 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினர். அவர்களை நீர்நிறைகுழு, சிறகுகள் நற்பணிக்குழு, அயல் இயற்கை அங்காடி, கிராம பொதுமக்கள் மாணவர்களின் சுழலியல் மீதான ஆர்வத்தை பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE