பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் சமையலர் பணி நியமனம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
சிவகங்கை : தினமலர் செய்தி எதிரொலியால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒரு ஆண்டுக்கு பின் சமையலர், சலவையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கை, தலையணை உறை போன்றவற்றை துவைக்க சலவையாளர், நோயாளிகளுக்கு உணவு சமைத்து தர சமையலர் பணியிடங்கள் காலியாக இருந்தன.கடந்த ஒரு ஆண்டிற்கு முன் இங்கு டீனாக இருந்த சந்திரிகா

சிவகங்கை : தினமலர் செய்தி எதிரொலியால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒரு ஆண்டுக்கு பின் சமையலர், சலவையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் படுக்கை, தலையணை உறை போன்றவற்றை துவைக்க சலவையாளர், நோயாளிகளுக்கு உணவு சமைத்து தர சமையலர் பணியிடங்கள் காலியாக இருந்தன.கடந்த ஒரு ஆண்டிற்கு முன் இங்கு டீனாக இருந்த சந்திரிகா நேர்காணல் நடத்தி, தேர்வானவர்கள் பட்டியலை மாநில சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், காலிபணியிடங்களை நிரப்பாமல் இருந்தது.

இதுகுறித்து தினமலரில்செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக காலியாக உள்ள 5 சமையலர், 10 சலவையாளர், நாவிதர் 1 ஆகிய பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அப்போது தேர்வு செய்யப்பட்டிருந்தவர்கள் பணியில் சேர்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X