ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் மழை பெய்து வருவதால் மரக்கரி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் சுற்றுப்பகுதியில் காட்டுகருவேலம் மரத்தில் கரி உருவாக்கும் பணி ஆண்டு முழுவதும் நடக்கிறது. வியாபாரிகள் மூலம் குஜராத், கோல்கட்டா, மும்பை, காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. காவனுார், எட்டிவயல், மஞ்சூர், கருங்குளத்துார் பகுதியில் மரக்கரி உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நிவர், புரெவி புயல் காரணமாக கடந்த நவ.,20 முதல் ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் தொடர்ந்து மழைபெய்கிறது. இதனால் விறகுகளை மூட்டம் போட முடியாமல் கரிஉற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களுக்கு ரூ.பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து காவனுார் கரி உற்பத்தியாளர் முனியாண்டி கூறுகையில், 'கடந்த 15 நாட்களாக விறகுகளை மூட்டம் போட முடியவில்லை. விறகு வெட்ட ரூ.300 வரை கூலிகொடுத்து டன் கணக்கில் குவித்துள்ளோம். மழையால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE