ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் துாய்மை இந்திய திட்டத்தின் கீழ் ஒப்பந்ததாரர் மூலம் ஒரு மேற்பார்வையாளர், 8 பரப்புரையாளர்கள் நியமனம் செய்தனர்.
திறந்தவெளி கழிப்பிடம் ஒழித்தல், புதியதாக கழிப்பறை கட்ட வலியுறுத்தல், குப்பை பிரித்து வழங்குவது பணிகளில் ஈடுபட்டனர். தற்போது புதிய ஒப்பந்ததாரர் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை விட குறைவாக தருவதாக பரப்புரையாளர்கள் புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து அவர்களை ஒப்பந்ததாரர் எந்தவித முன்அறிவிப்பு இல்லாமல் பணிநீக்கம் செய்துள்ளார். இதனை கண்டித்து நேற்று பரப்புரையாளர்கள் நகராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டு கமிஷனர் விஸ்வநாதனிடம் கடந்த மூன்றுஆண்டாக பணிபுரியும் திடீரென வேலையை விட்டுநீக்கிவிட்டனர்.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள முழு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE