புதுடில்லி:டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக, ஆம் ஆத்மி கட்சி தெரிவித்த குற்றச்சாட்டை, போலீசார் ஆதாரத்துடன் மறுத்துஉள்ளனர்.
டில்லியில், வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முழு அடைப்பு
நேற்று முன்தினம் அவர்களை, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான
அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.விவசாயஅமைப்புகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக, அவர்களுடன் கெஜ்ரிவால் பங்கேற்க இருந்த நிலையில், வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளதாக, ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ்
தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியதாவது:கெஜ்ரிவால், விவசாயிகளை சந்தித்ததை அடுத்து, அவரை வீட்டுக் காவலில் வைக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. அவரை பார்க்கச் சென்ற, ஆம் ஆத்மி சட்டசபை உறுப்பினர்களையும், தொண்டர்களையும், போலீசார் விரட்டி
அடித்துள்ளனர். கெஜ்ரிவால் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை கூட அனுமதிக்கவில்லை. அதேசமயம், கெஜ்ரிவால் வீட்டு வாசலில், பா.ஜ.,வினர் குவிய, போலீஸ் அனுமதி அளித்து உள்ளது.
முழு அடைப்பில், விவசாயிகளுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பங்கேற்றால், தன் பொய்முகம் வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தால், மத்திய அரசு கெஜ்ரிவாலை வீட்டுக் காவலில் வைத்துள்ளது.இவ்வாறு, அவர்பேசினார்.
இது குறித்து, டில்லி வடக்கு பிராந்திய காவல் துறை துணை கண்காணிப்பாளர் அன்டோ அல்போன்ஸ் கூறியதாவது:கெஜ்ரிவால், வீட்டுக் காவலில் வைக்கப்பட வில்லை. அவர், நேற்று முன்தினம் கூட, வெளியே சென்று வந்தார். அவர் எப்போது வேண்டுமென்றாலும், வெளியே போய் வரலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது.
பாதுகாப்பு
அவர் வீட்டு வாசலை படம் பிடித்து, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளோம். டில்லி மாநகராட்சி, பா.ஜ., மேயர்கள், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர், வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி, கெஜ்ரிவால் வீடு முன் கூடியுள்ளனர்.இதனால், அவர்களுக்கும், ஆம் ஆத்மி
கட்சியினருக்கும் மோதல் ஏற்படுவதை தடுக்கவே, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.இவ்வாறு, அவர்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE