பொது செய்தி

இந்தியா

பாதிப்பு தொடர்ந்து குறைகிறது சிகிச்சையில் 3.84 லட்சம் பேர்

Added : டிச 08, 2020
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, 3.84 லட்சமாக குறைந்துஉள்ளது.பரிசோதனைகொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம்வெளியிட்ட அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 10.26 லட்சம் பேரிடம் கொரோனா கண்டறியும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதன் வாயிலாக, 26 ஆயிரத்து, 567 பேரிடம் வைரஸ்

புதுடில்லி:கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து
வருகிறது. இதனால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, 3.84 லட்சமாக குறைந்துஉள்ளது.


பரிசோதனை

கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம்வெளியிட்ட அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 10.26 லட்சம் பேரிடம் கொரோனா கண்டறியும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதன் வாயிலாக, 26 ஆயிரத்து, 567 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதியானது.இவர்களுடன், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 97 லட்சத்தை கடந்துள்ளது.

இதுவரை தொற்றுக்குள்ளான, 97 லட்சத்து, 3 ஆயிரத்து, 770 பேரில், 3.84 லட்சம் பேர்
சிகிச்சையில் உள்ளனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில், 3.96 சதவீதம்.மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால், கடந்தஒரே நாளில், 39 ஆயிரத்திற்கும் மேலானோர் வைரஸ்
பாதிப்பில் இருந்துமீண்டுள்ளனர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை, 91 லட்சத்து, 78 ஆயிரத்து, 946 ஆக உயர்ந்துள்ளது; மீட்பு விகிதம், 91.78 சதவீதமாக உள்ளது.

புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் நிலையில், குணமடைவோர் எண்ணிக்கை கடந்த, 11 நாட்களாகஅதிகமாக உள்ளது.வைரஸ் பாதிப்பால் கடந்த, 24 மணி நேரத்தில் நாடு முழுதும், 385 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக டில்லியில், 63; மேற்கு வங்கத்தில், 48; மஹாராஷ்டிராவில், 40 பேர் உயிரிழந்துள்ளனர்.


இறப்பு விகிதம்

இதனால், நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 958 ஆக
உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக இருக்கிறது. மஹாராஷ்டிராவில்
அதிகபட்சமாக, 47 ஆயிரத்து, 774 பேர்உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு, அந்தஅறிக்கையில்
கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X