கவர்னர் மனு விசாரணைக்கு ஏற்பு அரசுக்கு நீதிமன்றம் 'நோட்டீஸ்'

Added : டிச 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை கோரி, மஹாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், மாநில அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது.மனு தாக்கல்உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர்களுக்கான அரசு வீடுகளுக்கு, 'அவர்கள் பதவி விலகிய நாளில் இருந்து, சந்தை மதிப்பிலான வாடகை செலுத்த வேண்டும்' என, அம்மாநில உயர்

புதுடில்லி:தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை கோரி, மஹாராஷ்டிரா
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், மாநில அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது.


மனு தாக்கல்

உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர்களுக்கான அரசு வீடுகளுக்கு, 'அவர்கள் பதவி
விலகிய நாளில் இருந்து, சந்தை மதிப்பிலான வாடகை செலுத்த வேண்டும்' என, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய மஹாராஷ்டிரா கவர்னரு மான பகத்சிங் கோஷ்யாரி, இந்த உத்தரவின்படி வாடகை செலுத்தவில்லை.இதனால், 'உங்கள் மீது ஏன்
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது' என, விளக்கம் கேட்டு, உயர் நீதிமன்றம் அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்த நோட்டீசுக்கு தடை கேட்டு, கவர்னர் பகத்சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சந்தை மதிப்பை விட, அரசு
வீடுகளுக்கு அதிக வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி, ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு
வந்தது. மனுவை ஏற்ற நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்க, உத்தரகண்ட் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


அவமதிப்பு நடவடிக்கை



உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான ரமேஷ் பொக்ரியால் மீது, அரசு குடியிருப்புக்கு வாடகை செலுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் மேற்கொண்ட அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு, அக்., 26ல், உச்ச நீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
09-டிச-202013:44:13 IST Report Abuse
Selvam Palanisamy உயர்பதவியில் இருப்பவர்கள் சட்டத்தையும், விதிகளையும் மதித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அரசுக்கு வீட்டு வாடகை பாக்கி வைத்திருப்பவருக்கு கவர்னர் பதவியை ஏன் வழங்குகிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X