புதுடில்லி:தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை கோரி, மஹாராஷ்டிரா
கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், மாநில அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது.
மனு தாக்கல்
உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர்களுக்கான அரசு வீடுகளுக்கு, 'அவர்கள் பதவி
விலகிய நாளில் இருந்து, சந்தை மதிப்பிலான வாடகை செலுத்த வேண்டும்' என, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய மஹாராஷ்டிரா கவர்னரு மான பகத்சிங் கோஷ்யாரி, இந்த உத்தரவின்படி வாடகை செலுத்தவில்லை.இதனால், 'உங்கள் மீது ஏன்
நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது' என, விளக்கம் கேட்டு, உயர் நீதிமன்றம் அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்த நோட்டீசுக்கு தடை கேட்டு, கவர்னர் பகத்சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், சந்தை மதிப்பை விட, அரசு
வீடுகளுக்கு அதிக வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி, ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு
வந்தது. மனுவை ஏற்ற நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்க, உத்தரகண்ட் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அவமதிப்பு நடவடிக்கை
உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான ரமேஷ் பொக்ரியால் மீது, அரசு குடியிருப்புக்கு வாடகை செலுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் மேற்கொண்ட அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு, அக்., 26ல், உச்ச நீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE