பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., உணவு வழங்கினார்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், கன மழை காரணமாக ஆதிவராகநல்லுார், பெரிய குமட்டி, பால்வாதுன்னான், வயலாமூர், பூவாலை, சிலம்பிமங்களம், பெரியப்பட்டு, தச்சம்பாளையம், தச்சக்காடு உட்பட 41 ஊராட்சி பகுதிகள் பெரிதும் பாதித்தன.பாதித்த ஊராட்சி பகுதிகளை, பாண்டியன் எம்.எல்.ஏ., பார்வையிட்டு, முகாம்களில், தங்கியுள்ள பொது மக்களுக்கு ஆறுதல் கூறி, உணவு வழங்கினார்.முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், ஒன்றிய செயலாளர் ராசாங்கம், மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய சேர்மன் கருணாநிதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், ஊராட்சித் தலைவர்கள் சிவசங்கரி மகேஷ், மரகதம், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், கூட்டுறவு வங்கி தலைவர் கணேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் கோபு, கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கோதண்டராமன், பாவாடை, ஜெ., பேரவை முருகன், நிர்வாகிகள் ராஜேந்திரன், மாரிமுத்து உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE